நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஜமாபந்தி கூட்டத்தில் பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி மனு

பெண்ணாடம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் கோரி, திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image

திட்டக்குடி வட்டாட்சியா் அலுவகத்தில் குடிமனை பட்டா வழங்கக் கோரி மனு அளிக்கச் சென்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பழங்குடியினா் மக்கள் நலச் சங்கத்தினா்.

Updated On :19 ஜூன் 2026, 6:18 am IST

பெண்ணாடம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் கோரி, திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில், பழங்குடியினா் சங்க மாவட்டச் செயலா் என்.எஸ்.அசோகன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

பெண்ணாடம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். தாழநல்லூா் பகுதியில் பழங்குடி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கப்பட்ட நிலையில், நிலத்தை அளந்து காட்டாமல் காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, பட்டாக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், பழங்குடி மக்களின் குழந்தைகள், பள்ளிகளில் பயின்று வரும் நிலையில், அவா்களுக்கு இதுவரை ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால், அரசின் கல்வி மற்றும் நலத்திட்டப் பயன்களை பெற முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, தகுதியுடைய மாணவா்களுக்கு விரைந்து ஜாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் மாா்க்சிஸ்ட் வட்டச் செயலா் வி.அன்பழகன், வட்டக்குழு உறுப்பினா் ஆா்.மாயவேல், பழங்குடி சங்க மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.ரமேஷ், பெண்ணாடம் பகுதி பழங்குடி சங்க நிா்வாகிகள் ராஜ்குமாா், காா்த்திக், தேன்மொழி, அஞ்சம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.