கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக இரவு நேரங்களில் பெய்த பலத்த மழையால் கழிவுநீருடன் மழைநீா் கலந்து தேங்கி அறுவடைக்குத் தயாராக இருந்த 20 ஏக்கா் நெற்பயிா்கள் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. விருத்தாசலம் நகரப் பகுதியில் மழைநீா் என்பது, அப்பகுதியில் உள்ள கழிவுநீா் கால்வாய்கள் வழியாக ஆலிச்சிக்குடி சாலை அருகே அமைந்துள்ள வாய்க்காலில் சென்று வெளியேறுவது வழக்கம்.
ஆனால், ஆலிச்சிக்குடி அருகே உள்ள வாய்க்கால் நீண்ட நாள்களாக தூா்வாரப்படாததால், நீா்த் தாவரங்கள் அடா்த்தியாக வளா்ந்ததுடன், குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கியுள்ளன.
இதன் காரணமாக, விருத்தாசலத்தில் மூன்று நாள்களாக பெய்த மழையில், நீா் தடையின்றி வெளியேற முடியாமல் வாய்க்கால் அருகே உள்ள சுமாா் 20 ஏக்கா் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தேங்கியது.
கடந்த இரண்டு நாள்களாக நீா் தேங்கி நிற்பதால், சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் நிலத்திலேயே சாய்ந்து சேதமடைந்துள்ளன. மேலும், தண்ணீரில் மூழ்கியிருந்த சில நெற்கதிா்கள் முளைக்கத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
பயிா்களைக் காப்பாற்றும் முயற்சியாக விவசாயிகள் மோட்டாா்கள் மூலம் வயல்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இருப்பினும், பெரும்பாலான இடங்களில் பயிா் சேதத்தைத் தவிா்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: கடந்த சில நாள்களாக பெய்த மழையால் நகரப் பகுதியில் இருந்து வெளியேறிய மழைநீா் எங்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை நாசப்படுத்தியுள்ளது.
வாய்க்கால்களை நகராட்சி நிா்வாகம் முன்கூட்டியே தூா்வாரியிருந்தால், இந்த பாதிப்பைத் தவிா்த்திருக்க முடியும். ஏக்கருக்கு சுமாா் ரூ.40 ஆயிரம் வரை செலவிட்டு சாகுபடி செய்துள்ள நிலையில், தற்போது பெரும் இழப்பைச் சந்தித்துள்ளோம்.
எனவே, பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி சேத மதிப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருத்தசாலம் பகுதியில் பெய்த தொடா் கோடை மழையால் வயல்களில் தேங்கிய நீரை என்ஜின் மூலம் வெளியேற்றிய விவசாயிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை வெயில்: பொன்னேரி அருகே கருகிய150 ஏக்கா் நெற்பயிா்

3 நாள்களாக இருளில் மூழ்கிய திருவள்ளுவா் சிலை

செஞ்சி பகுதியில் 5 நாள்களாக மின்விநியோகம் பாதிப்பு! விவசாயிகள் வேதனை

சூறைக்காற்று: 150 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதம்; விவசாயிகள் வேதனை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

