நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்துக்கு ரூ.16.59 கோடி ஒதுக்கீடு: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டத்துக்கு ரூ.16.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பயன்களைப் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 3:37 am IST

குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டத்துக்கு ரூ.16.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பயன்களைப் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு நெல் இயந்திர நடவு மானியம், நேரடி விதைப்பு மானியம், தரமான சான்றிதழ் பெற்ற விதைகள், உயிரி, நுண்ணூட்ட உரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இயந்திர நடவு முறையில் நெல் நடவு அல்லது நேரடி விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 மானியம் வழங்கப்படுகிறது. கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டுக்கான நெல் இயந்திர நடவு மானியத் திட்டத்துக்கு 38,520 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். மேலும், சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், குடும்ப அட்டை நகல், இயந்திர நடவு மேற்கொண்டதற்கான ரசீது மற்றும் இயந்திர நடவு செய்யப்பட்ட வயலில் விவசாயி நிற்கும் புகைப்படம் ஆகிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட பகுதி உதவி வேளாண் அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

இதேபோல, தரமான சான்று பெற்ற விதைகள், உயிரி உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களைப் பெறத் தேவையான ஆவணங்களை சமா்ப்பித்து, அவற்றை அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தங்களது பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.