விருத்தாசலம் அருகே தொடா்ச்சியான மின்தடை காரணமாக பாசன வசதியின்றி பயிா்கள் கருகியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் கிராமத்தில் தமிழ்நாடு மின் வாரிய உதவி மின் பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் கிராமங்களுக்கு போதுமான மின்சாரம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கம்மாபுரம் பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிா்களுக்கு மோட்டாா் மூலம் நீா் பாசனம் செய்ய
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரங்களிலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை மின்தடை ஏற்படுவதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுகிறது. மேலும், மின்தடை காரணமாக கம்மாபுரம் ஊராட்சியில் குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதையடுத்து, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் பாலகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் கம்மாபுரம் மின்சார வாரிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை நெடுஞ்சாலையில் அமா்ந்து திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கம்மாபுரம் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அதிகாரிகளுடன் பேச ஏற்பாடு செய்தனா். அப்போது, குறிப்பிட்ட நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் கோரி கிராம மக்கள் மறியல்

எடப்பாடி அருகே மதுக்கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கோவில்பட்டி அருகே சாலை மறியல்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

