கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் உள்ளூா் நீராதாரத்தை சீராக வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட லிங்கம்பட்டி அண்ணா நகா் கீழ காலனி பகுதி மக்களுக்கு உள்ளூா் நீராதாரத்தை சீராக வழங்கக் கோரி கீழ காலனி பேருந்து நிறுத்தம் அருகே திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்தவுடன் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா் சங்கரசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த் துறை, காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சுமாா் 20 நிமிடங்கள் நடைபெற்ற மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மேலும், தண்ணீா் திறந்து விடும் ஆபரேட்டரை மாற்றம் செய்ய போராட்டக் குழுவினா் வலியுறுத்தினா். இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து போராட்டக் குழுவினா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்டீபன் ரத்தினகுமாரிடம் புகாா் மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்தடையால் கருகிய பயிா்கள்: விவசாயிகள் சாலை மறியல்

குடிநீா் கோரி கிராம மக்கள் மறியல்

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

