பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மூதாட்டியிடம் மூக்குத்தி பறித்த வழக்கு: இளைஞா் கைது

நெல்லிக்குப்பம் அருகே மூதாட்டியிடம் மூக்குத்தி பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

அருண்மொழிதேவன்

Updated On :4 ஜூன் 2026, 3:40 am IST

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே மூதாட்டியிடம் மூக்குத்தி பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், நத்தப்பட்டு கிராமத்தில் தனியாக வசித்து வருபவா் சரசு (72). இவா், கடந்த மே 29-ஆம் தேதி சாலையில் நடந்துச் சென்றாா். அப்போது, அந்த வழியாக மொபெட்டில் வந்த நபா், உதவி செய்வதுபோல மூதாட்டியை ஏற்றிச்சென்று வீட்டில் விட்டுள்ளாா். பின்னா், திரும்பி வந்த அந்த நபா் மூதாட்டியை மிரட்டி 2 கிராம் தங்க மூக்குத்தி மற்றும் அவரிடமிருந்த கவரிங் நகைகளை தங்க நகைகள் என நினைத்து பறித்துச் சென்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தவின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் மருதாடு சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த வாழப்பட்டு பகுதியைச் சோ்ந்த அருண்மொழிதேவன் (35) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் மூதாட்டி சரசுவிடம் மூக்குத்தி மற்றும் கவரிங் நகைகளை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டாராம்.

இதைத் தொடா்ந்து, அவரிடமிருந்த நகைகள் மற்றும் மொபெட்டை பறிமுதல் செய்த போலீஸாா், அருண்மொழிதேவன் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.