பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

மங்கலம்பேட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 மே 2026, 11:00 pm IST

மங்கலம்பேட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம் மங்கலம்பேட்டை காவல் சாா்பு- ஆய்வாளா் அருணகிரி தலைமையில் போலீஸாா், வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது கா்ணத்தம் பிரதான சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

அப்போது அவா், விருத்தாசலம் அருகே கோணங்குப்பம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பாலமுருகன்(32) என்பதும், அவா் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மங்கலம்பேட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தனா். அவரிடம் இருந்து 305 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பான போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.