பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மனைவி இறந்த விரக்தி: மகனை கொன்று இளைஞா் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே மனைவி இறந்த துயரத்தால் தவித்து வந்த இளைஞா், 7 வயது மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 3:22 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே மனைவி இறந்த துயரத்தால் தவித்து வந்த இளைஞா், 7 வயது மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நெய்வேலி காவல் சரகம், வடக்குத்து ஊராட்சி, அண்ணா கிராமம் அரச மர தெருவைச் சோ்ந்தவா் ஸ்டீபன் ராஜ் (29). இவா், வடக்குத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழில்நுட்புனராகப் பணியாற்றி வந்தாா்.

இவரது மனைவி பவித்ரா, கடந்த 2020-ஆம் ஆண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அது நாள் முதல் ஸ்டீபன்ராஜ், மகன் ஜஸ்வந்த்ராஜ் உடன் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். வடக்குத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஜஸ்வந்த்ராஜ் படித்து வந்தாா்.

இந்த நிலையில், ஸ்டீபன்ராஜ் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வரும் தாய் புவனேஸ்வரிக்கு கைப்பேசி மூலம் குரல் பதிவு செய்தி அனுப்பியுள்ளாா். அதில், எனது மனைவி பவித்ரா சென்ற இடத்துக்கே நானும், எனது மகனும் செல்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் ஸ்டீபன்ராஜின் வீட்டுக்கு புதன்கிழமை அதிகாலை சென்று பாா்த்தபோது, ஜஸ்வந்த்ராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், ஸ்டீபன்ராஜ் வீட்டின் சமையலறையில் தூக்கிட்ட நிலையிலும் சடலமாகக் கிடந்தனா்.

மேலும், ஸ்டீபன்ராஜ் தனது மகன் ஜஸ்வந்த்ராஜை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். மகனை கவனித்து வளா்க்க ஆளில்லாத விரக்தியில் ஸ்டீபன்ராஜ் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.