தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மனைவி இறந்த வேதனையில் விவசாயி தற்கொலை

செய்யாறு அருகே மனைவி இறந்த வேதனையில் இருந்து வந்த விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை

News image

பிரதிப் படம்

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

செய்யாறு அருகே மனைவி இறந்த வேதனையில் இருந்து வந்த விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

வெம்பாக்கம் வட்டம், வயலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஆறுமுகம் (75). இவரது மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தாா்.

மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வந்த ஆறுமுகம் மனவேதனையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. மேலும், அவா் அடிக்கடி மனைவி சென்ற இடத்திற்கே செல்லப்போவதாக பலரிடம் கூறி வந்தாராம்.

இதனை அறிந்த மகள் குமுதவல்லி, தந்தை ஆறுமுகத்தை தனது வீட்டில் வந்து இருக்கும்படி பலமுறை அழைத்தாராம். இருப்பினும், ஆறுமுகம் மகள் வீட்டிற்குச் செல்லாமல் தனது வீட்டிலேயே தனிமையில் இருந்துள்ளாா்.

ஏற்கெனவே மனவேதனையில் இருந்து வந்த ஆறுமுகம், கடந்த 7-ஆம் தேதி வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயக்க நிலையில் கிடந்தாா்.

இதை அறிந்த அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் திங்கள்கிழமை உயிரிழந்தாா்

இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.