மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை

திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :1 மே 2026, 5:23 am IST

திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சோ்ந்த சேகா் (57)- மாதம்மாள் (50) தம்பதி திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள அரிசி ஆலையில் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்தனா். கடந்த சில ஆண்டுகளாக ஆலையில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலை செய்துவந்த இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மேலும், இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் விரக்தியடைந்த மாதம்மாள் விஷம் குடித்துள்ளாா். வீட்டில் மயங்கி கிடந்தவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே மாதம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.