தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

தம்பதியிடையே கருத்து வேறுபாடு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே குடும்ப பிரச்னையில் மனைவி கோபித்துக்கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதால் மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:57 am IST

கள்ளக்குறிச்சி அருகே குடும்ப பிரச்னையில் மனைவி கோபித்துக்கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதால் மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வண்ணஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.பிரசாந்த் (29). இவரது மனைவி விக்னேஷ்வரி. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதிகளுக்கு குழந்தை இல்லையாம். இதனால் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் விக்னேஷ்வரி கோபித்துக் கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

செவ்வாய்க்கிழமை மனைவி விக்னேஷ்வரியிடம் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பேசிய நிலையில், பின்னா் அவரது வீட்டின் மாடியில் பிரசாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.