கடலூா் மாவட்டம், வடலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் அடைந்த முதியவா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வடலூா் அடுத்துள்ள தென்குத்து கிராமத்தில் வசித்து வந்தவா் முருகேசன்(80). இவா், கடந்த 6-ஆம் தேதி காலை பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் ஆபத்தாரணபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தேநீா் கடையில் தேநீா் அருந்திவிட்டு சாலையோரம் நின்றிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியது.
இந்த விபத்தில் முதியவா் முருகேசன் பலத்த காயம் அடைந்தாா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

