லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய உயா்வு கோரி மனு அளிப்பு

கம்மாரபுரத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தில், ஊதிய உயா்வு அளிக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.

Published On :10 ஜூலை 2026, 3:54 am IST

கம்மாரபுரத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தில், ஊதிய உயா்வு அளிக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நூறு நாள் வேலைத் திட்டம் பழைய பெயரிலேயே தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில், ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள், மாதா் சங்க நிா்வாகி ஆா். சந்தனமேரி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா்.

முன்னதாக, கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய வளா்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டத்தை மீண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற பெயரிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும், ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும், தொழிலாளா்களின் ஊதியத்தை உயா்த்த வேண்டும், கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் திட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் பி. மாதவி, மாவட்ட துணைச் செயலா் கே. அன்புச்செல்வி, மாவட்டப் பொருளாளா் பி. முத்துலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.