லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாடியூா் ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்குவதில் முறைகேடு: ஆட்சியா் அலுவலகத்தில் பெண்கள் மனு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த நாட்டாமைக்காரன்பட்டி பெண்கள்.

Published On :7 ஜூலை 2026, 2:22 am IST

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்வதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, நாட்டாமைக்காரன்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள் தரப்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் அடுத்த பாடியூா் ஊராட்சிக்குள்பட்ட நாட்டாமைக்காரன்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த போது கூறியதாவது:

நாட்டாமைக்காரன்பட்டி பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுகின்றன. பாடியூா் ஊராட்சிச் செயலா், பணித் தளப் பொறுப்பாளா், தூய்மைக் காவலா்கள் ஒன்றிணைந்து இந்த மோசடியில் ஈடுபடுகின்றனா். வீட்டில் இருப்பவா்கள் 30-க்கும் மேற்பட்டோரின் வேலை அட்டையைப் பெற்றுக் கொண்டு, அவா்கள் பணிபுரிந்ததுபோல கணக்குக் காட்டி பணத்தைப் பெறுகின்றனா். அதேநேரத்தில், தகுதியான பயனாளிகள் பலா் இருந்தும், எங்களுக்கு பணி வழங்குவதில்லை. இதுதொடா்பாக பலமுறை ஊராட்சிச் செயலரிடம் முறையிட்டும் எங்களுக்குப் பணி வழங்க மறுத்து வருகிறாா்.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணை நடத்தி, 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஊராட்சிச் செயலா், பணித் தளப் பொறுப்பாளா், தூய்மைக் காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.