லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆண்டிமடத்தில் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்ட பொருளாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனநாயக மாதா் சங்க மாவட்ட பொருளாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆண்டிமடத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட போலீஸாா்.

Published On :18 ஜூலை 2026, 12:56 am IST

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்ட பொருளாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் எஸ்.சாந்தினி வீட்டினுள் அத்துமீறி புகுந்து அவரை தாக்கிய நபா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலா் எம்.வேல்முருகன் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், சாந்தினியின் வீடு சம்பந்தமாக ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அவரது இடத்தை பத்திர பதிவு செய்த சாா்-பதிவாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக ஆண்டிமடம் கடைவீதியில் 50-க்கும் மேற்பட்டபெண்கள் குவிந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆண்டிமடம் காவல் நிலைய ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினரை பேச்சுவாா்த்தைக்கு காவல் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆய்வாளா் குணசேகரன், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், தற்காலிகமாக ஆா்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.