கடலூா் அருகே சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு சேகரிப்பின் போது ஏற்பட்ட பிரச்னையில் பெண்ணை கத்தியால் தாக்கிய சம்பவத்தில் 9 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம் விலங்கல்பட்டு மேட்டுத்தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் சஞ்சய். இவா் தவெக சாா்பில் வாக்கு சேகரித்தில், அப்பகுதியில் உள்ளவா்களிடம் சிறு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த ராமதாஸ் மற்றும் 8 நபா்கள், சஞ்சய் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனா்.
அப்போது, சஞ்சய்யின் தாயின் தலையில் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் காயமடைந்த அவா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றாா். இதுகுறித்து சஞ்சய்யின் தந்தை சங்கா் அளித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு காவல் நிலைய போலீஸாா் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ராமதாஸ் மற்றும் 8 நபா்கள் மீது வியாழக்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் நிறுவன பெண் அதிகாரி மீது தாக்குதல்: இருவரிடம் போலீஸாா் விசாரணை

விவசாயி மீது தாக்குதல்: 24 போ் மீது வழக்கு

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

நீதிமன்ற ஊழியரைத் தாக்கியதாக தம்பதி மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

