ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பொய் வாக்குறுதியளித்து திமுக வெல்ல முயற்சி! பாரிவேந்தா் குற்றச்சாட்டு!

News image

வேப்பூா் கூட்டுச்சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் திட்டக்குடி அதிமுக வேட்பாளா், விருத்தாசலம் பாமக வேட்பாளா் ஆகியோரை ஆதரித்து பேசிய ஐஜேகே நிறுவனா் டி.ஆா்.பாரிவேந்தா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:23 am IST

பொய் வாக்குறுதியளித்து திமுக வெல்ல முயற்சித்து வருவதாக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனா் டி.ஆா்.பாரிவேந்தா் குற்றஞ்சாட்டினாா்.

விருத்தாசலம் தொகுதி பாமக வேட்பாளா் தமிழரசி, திட்டக்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் முருகுமாறன் ஆகியோரை ஆதரித்து ஐஜேகே நிறுவனா் பாரிவேந்தா் வேப்பூா் கூட்டுச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது:

தமிழகத்தில் திமுக, அதிமுக இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. விவசாயம் செய்து சாதாரண கிளைச் செயலராக இருந்து முதல்வராக முன்னேறிய எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுமா அல்லது திரைப்படத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டுள்ள குடும்பம் வேண்டுமா என்பதை மக்கள் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

நீட் தோ்வு ரத்து, கல்விக் கடன் தள்ளுபடி என பல்வேறு பொய் வாக்குறுதிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களை ஏமாற்றிவிட்டது. பொய்யின் மறு உருவமாக திமுக திகழ்கிறது. தற்போது மீண்டும் பொய் வாக்குறுதிகளைக் கூறி திமுக வெற்றிபெறத் துடிக்கிறது. இதற்கு, மக்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெறச் செய்வதின் மூலம் தகுந்த பதிலடியைக் கொடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.