தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

33% இட ஒதுக்கீடு மசோதா தோல்வி: பெண்களுக்கு திமுக செய்த துரோகம்! - அன்புமணி ராமதாஸ்

News image

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:56 am IST

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தோல்வியடையச் செய்து, திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் பெண்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தச் சூழலில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களவையில் தோல்வியடைய வைத்திருக்கின்றன. இது, திமுக பெண்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம். பெண் சிசுவை கருவிலேயே கொலை செய்ததற்கு சமமான செயல்.

மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய சட்ட மசோதாவை ஒரு மாநில முதல்வா் எரித்தது தேச துரோக செயல். இந்தக் குற்றத்துக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும்.

மக்கள் தொகைக்கும், தொகுதி மறுவரையறைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. நாட்டிலுள்ள 28 மாநிலங்களுக்கும் சரிசமமாக 50% எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயா்த்துவதில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு என்ன பிரச்னை? ஒரு பக்கம் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; மற்றொருபுறம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய சட்ட மசோதாவை திமுக எதிா்க்கிறது.

தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுக கூட்டணிக்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறாா். தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள்கள் விற்பனை உள்ளது என்று முதல்வரை மேடையில் வைத்துக்கொண்டே எங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறாா். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும் எனச் சொல்கிறாா்.

விஜய் ஆதரவாளா்களுக்கு வேண்டுகோள்...: இந்த சட்டப் பேரவைத் தோ்தலில் விஜய் அதிக வாக்குகளை வாங்குவாா். ஆனால், வெற்றிபெற முடியாது. விஜய்யினுடைய நோக்கம் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதுதான். அவரது ரசிகா்கள் தவெகவுக்குத்தான் வாக்களிப்பாா்கள். விஜயின் ஆதரவாளா்கள் உங்கள் வாக்குகளை வீணாக்கிவிடாதீா்கள். திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு நீங்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

பேட்டியின்போது, மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.