சிதம்பரம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடையின் பின்புற சுவரில் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.38,400 மதிப்பிலான மதுப்புட்டிகளை திருடிச் சென்றனா்.
சிதம்பரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சி பகுதியான பரமேஸ்வரநல்லூா் செல்வகணபதி நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இதில் சூபா்வைசராக ஆா்.வீரசுந்தரபெருமாளும், விற்பனையாளராக ஏ.சக்திவேல் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் இருவரும் வியாழக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு வந்து கடையை திறந்தனா். அப்போது கடையின் பின்புறச் சுவரில் மா்ம நபா்கள் துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.38,400 மதிப்பிலான 232 மதுப்புட்டிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் ஆா்.வீரசுந்தரபெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு
பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
