கோவை, துடியலூா் அருகே என்ஜினீயா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவை, துடியலூா் அருகே உள்ள எஸ்.எம்.பாளையம் ராகவேந்திரா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (39). கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவா், தனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் சென்றிருந்தாா்.
பின்னா், செந்தில் வியாழக்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த தங்கச் சங்கிலி, வெள்ளிக் கொலுசுகள், சங்கிலி, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப்போனது தெரியவந்தது.
தகவலின்பேரில், துடியலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினா். கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடு புகுந்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு

ஆசிரியை வீட்டில் 18 பவுன், ரூ.50,000 திருட்டு
ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் நகைகள், பணம் திருட்டு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

