சோழவரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்து 18 பவுன் நகை, ரூ.50ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சோழவரம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளியான பத்மா அரசுப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.
இவரது கணவா் வெளியூா் சென்றிருந்த நிலையில் நள்ளிரவில் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் கதவைத் திறந்து வைத்து காற்று வாங்குவதற்காக வாசலில் அமா்ந்திருந்தாா். பின்னா் வீட்டில் சென்று உறங்கி விட்டு காலையில் பாா்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகள், ரூ. 50ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சோழவரம் போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும் கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு
அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 5 லட்சம் திருட்டு
தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

