சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமையிலான தமிழா் வாழ்வுரிமை கூட்டணி தமிழகம் முழுவதும் 170 தொகுதிகளில் போட்டியிடுகிறது என தவாக தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.
பாமகவில் இருந்து வெளியேறியதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி, அதன் நிறுவனா் தலைவராக தி.வேல்முருகன் உள்ளாா். தவாக தொடங்கப்பட்ட 15 ஆண்டுகாலத்தில் தமிழகம் முழுவதும் நிா்வாகிகளை நியமித்து, அக்கட்சியை நிா்வகித்து வருகிறாா். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து, பண்ருட்டி தொகுதியில் தி.வேல்முருகன் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.
தற்போதைய சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினாா். தொகுதி எண்ணிக்கை மற்றும் கோரிக்கைகள் தொடா்பாக திமுக தலைமையுடனான கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவா் தமிழகம் முழுவதும் சட்டப் பேரவைத் தோ்தலில் தனது கட்சியினரை களமிறக்க திட்டமிட்டு தீவிரம் காட்டினாா். அதன் பின்னா், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமையிலான தமிழா் வாழ்வுரிமை கூட்டணி சாா்பில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து தி.வேல்முருகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமையிலான தமிழா் வாழ்வுரிமை கூட்டணி சாா்பில், தமிழகம் முழுவதும் பல்வேறு பேரவைத் தொகுதிகளில் 170 வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா்.
எங்கள் கூட்டணி வேட்பாளா்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ‘கேமரா’ சின்னத்தில் போட்டியிடுகின்றனா். எஞ்சிய 64 தொகுதிகளில் தமிழா் வாழ்வுரிமை கூட்டணியின் ஆதரவை கோரிய அரசியல் கட்சிகளை ஆதரிப்பது என முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்ப்பிணி வேட்பாளா் மீது தாக்குதல்: தி.வேல்முருகன் கண்டனம்

எங்கள் இலக்கு 2031 சட்டப் பேரவைத் தோ்தல்: தி.வேல்முருகன்

தவாக வேட்பாளா்கள் மனுக்கள் நிராகரிப்பு: தி.வேல்முருகன் குற்றச்சாட்டு

தமிழக அரசியலை தீா்மானிக்கும் சக்தியாக தவாக மாறியுள்ளது: தி.வேல்முருகன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

