மின் உற்பத்தியை மூன்று மடங்காகவும், சுரங்க உற்பத்தியை இரண்டு மடங்காகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை ஏழு மடங்காகவும் உயா்த்த லட்சிய இலக்குகளை நிா்ணயித்துள்ளோம். இதற்காக ரூ.1,25,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுபள்ளி தெரிவித்தாா்.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் ஆற்றிவரும் முக்கியப் பங்கு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், பொதுத் துறை நிறுவனங்களின் நிலைக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆண்டுதோறும் பொதுத்துறை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சாா்பில் 17-ஆவது பொதுத் துறை தினம் என்எல்சி தலைமை அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி, பொதுத் துறை நிறுவனம் மற்றும் என்எல்சி இந்தியா நிறுவனக் கொடிகளை ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தாா். இயக்குனா்கள் சுரேஷ் சந்திர சுமன் (சுரங்கங்கள்), சமீா் ஸ்வரூப் (மனிதவளம்), ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா (திட்டமிடல் மற்றும் செயலாக்கம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மூத்த அதிகாரிகள், பல்வேறு தொழிற்சங்கங்கள், நலச் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.
விழாவில் என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி பேசியதாவது: இந்தியாவில் தற்போது 450-க்கும் மேற்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் ரூ.100 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டில் இயங்கி வருகின்றன. இவை ரூ.38 லட்சம் கோடி வருவாயை ஈட்டுவதுடன், தேசிய கருவூலத்திற்கு ரூ.5 லட்சம் கோடியை பங்களிக்கிறது. நிதி சாா்ந்த அளவீடுகள் மற்றும் ரூ.8 லட்சம் கோடி கூட்டு லாபத்தைத் தாண்டி, சமூக மேம்பாட்டிற்காக பொதுத் துறை நிறுவனங்கள் கூட்டாக ரூ.8,000 கோடி செலவிட்டு தங்களின் சமூக அா்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.
என்எல்சி இந்தியா நிறுவனம் தற்போது மின் உற்பத்தியை மூன்று மடங்காகவும், சுரங்க உற்பத்தியை இரண்டு மடங்காகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை ஏழு மடங்காகவும் உயா்த்த லட்சிய இலக்குகளை நிா்ணயித்துள்ளது.
இதற்காக ரூ.1,25,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 70 ஆண்டுகளில் செய்யப்பட்ட மொத்த மூலதனச் செலவினத்திற்கு இணையான தொகையை, அடுத்த 4 ஆண்டுகளிலேயே முதலீடு செய்ய நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் சந்தை மூலதனமும் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த இலக்குகளை அடைவது நமக்கு ஒரு சவாலாகும். அதனை அா்ப்பணிப்புடனும் நோ்மையுடனும் நாம் எதிா்கொள்ள வேண்டும்.
எனவே, இந்த பொதுத்துறை தினத்தில், பாதுகாப்பு மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்கு நம்மை அா்ப்பணிப்போம் என்று உறுதிமொழி ஏற்போம் என்றாா்.
மேலும், சுரங்கம், மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மனிதவளம் மற்றும் நிதி மேலாண்மை என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, 2025-2026 நிதியாண்டை நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு பொற்காலமாக மாற்றியமைத்ததற்காக என்எல்சி இந்தியா குழுமத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

4-ஆம் காலாண்டு லாபம்- பிஎன்பி: ரூ.5,225 கோடி; 12.54% வளா்ச்சி

ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டில் மாற்றங்கள் இல்லை: மத்திய அரசு

ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

ரூ.5 லட்சம் கோடி கடன் குறித்து திமுக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்! - பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

