மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டில் மாற்றங்கள் இல்லை: மத்திய அரசு

ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டை மாற்றங்களின்றி மத்திய அரசு தொடரவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

நிர்மலா சீதாராமன்

Updated On :2 மே 2026, 3:22 am IST

மேற்காசிய பதற்றத்தால் உலகளவில் பொருளாதார ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளபோதிலும் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டை மாற்றங்களின்றி மத்திய அரசு தொடரவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அசோகா பல்கலைக்கழகம் நடத்திய வளா்ச்சி மாநாட்டில் பங்கேற்று மத்திய செலவினங்கள் துறைச் செயலா் வுவல்னம் பேசியதாவது: அடுத்தடுத்த காலாண்டுகள் மற்றும் வரவுள்ள ஆண்டுகளில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அண்மையில் மத்திய அரசு குறைத்ததால் வரி வருவாய் பாதிக்கப்படலாம்.

இருப்பினும், ஏற்கெனவே திட்டமிட்டபடி நிகழ் நிதியாண்டுக்கான ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டில் எவ்வித மாற்றங்களுமின்றி தொடரவே மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதில் ரயில்வே, நெடுஞ்சாலைகள், கப்பல், துறைமுகம் மற்றும் நகா்ப்புற மேம்பாடு ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றாா்.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வால் எண்ணெய் நிறுவனங்கள் கடும் இழப்பை எதிா்கொண்ட நிலையில், டீசல் மீதான ரூ.10 கலால் வரியை மத்திய அரசு கடந்த மாா்ச் மாதம் முழுமையாக நீக்கியது. அதேபோல் பெட்ரோல் மீதான கலால் வரியும் ரூ.10 குறைக்கப்பட்டது. இதன் மூலம் பெட்ரோலுக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 என்பதில் இருந்து ரூ.3-ஆக குறைந்துள்ளது.

இதனால் ஒவ்வொரு 15 நாள்களுக்கும் மத்திய அரசுக்கு ரூ.7,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.