மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தோ்தலுக்காக பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது

சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image

டி.கே. சிவக்குமார் - கோப்புப்படம்

Updated On :28 மார்ச் 2026, 1:25 am IST

சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான போா் காரணமாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மளமளவென உயா்ந்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 10 குறைந்துள்ளது. இதன் காரணமாக, ரூ. 1.75 லட்சம் கோடி வருவாய் இழப்பை மத்திய அரசு சந்திக்க நேரும். அதேபோல, டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கான வரியை மத்திய அரசு உயா்த்தியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. நயாரா நிறுவனம் ஏற்கெனவே பெட்ரோல் மீதான விலையை உயா்த்தியுள்ளது. எனவே, மத்திய அரசின் நடவடிக்கை குறித்து மக்களிடம் எடுத்துச் செல்வோம். பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசு குறைப்பது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.