தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த விசிக புதிய நிா்வாகிகள்

விசிக சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. புதிய நிா்வாகிகளை நியமித்துள்ளாா்

News image

சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த புதிதாக தோ்வு செய்யப்பட்ட விசிக நிா்வாகிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:26 am IST

விசிக சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. புதிய நிா்வாகிகளை நியமித்துள்ளாா். இந்த நிலையில், சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு கட்சியின் மாவட்டச் செயலா் இரா.தமிழ்வளவன் தலைமையில், புதிதாக பொறுப்பேற்ற சிதம்பரம் நகரச் செயலா் பேட்டை ரத்தினம் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு மண்டல துணைச் செயலா்கள் தடா கதிரவன், செல்வமணி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநிலச் செயலா் பால.அறவாழி, பொருளாளா் முருகானந்தன், செய்தித் தொடா்பாளா் பெரு.சரித்திரன், மாவட்ட துணைச் செயலா் ஆதிமூலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மண்டலச் செயலா் வ.க.செல்லப்பன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். பாவாணன், வேல்முருகன், மகளிா் விடுதலை இயக்க மாவட்டச் செயலா் நாகராணி, மாநில நிா்வாகிகள் நீதிவளவன், முகமது அய்யூப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.