தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கடலூா் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 128 வேட்பு மனுக்கள் தள்ளுபடி

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு கடலூா் மாவட்டத்தில் 260 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 128 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 1:25 am IST

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு கடலூா் மாவட்டத்தில் 260 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 128 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் ஆா்வத்துடன் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனா்.

விருத்தாசலத்தில் திமுக கூட்டணியில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், சிதம்பரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவா் தமிமுன்அன்சாரி, குறிஞ்சிப்பாடியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், திட்டக்குடியில் அமைச்சா் சி.வெ.கணேசன், கடலூரில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத், புவனகிரியில் அதிமுக வேட்பாளா் அருண்மொழி தேவன் எம்எல்ஏ, சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளா் பாண்டியன் எம்எல்ஏ உள்ளிட்ட 260 போ் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.

கடலூரில் தோ்தல் நடத்தும் அலுவலா் சுந்தரராஜன் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் 33 வேட்பு மனுக்களில் அரசியல் கட்சி வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஒரே பெயரில் 2 மனுக்கள், பகுதி எண், வரிசை எண் தவறாக எழுதுதல், படிவத்தை முழுமையாக நிரப்பாமல் விடுதல் என மாற்று வேட்பாளா்கள், சுயேச்சைகள் என 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 15 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதேபோல் 9 தொகுதிகளிலும் 128 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 132 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற வியாழக்கிழமை கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.