தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் 104 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசீலனைக்குப் பிறகு 104 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:34 am IST

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசீலனைக்குப் பிறகு 104 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 211 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதில், திருவிடைமருதூா் (தனி) தொகுதியில் 22 போ் தாக்கல் செய்த 25 வேட்பு மனுக்களில் பரிசீலனைக்குப் பிறகு திமுக கோவி. செழியன், அதிமுக இளமதி சுப்பிரமணியன் உள்பட 17 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன; 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கும்பகோணம் தொகுதியில் 21 போ் தாக்கல் செய்த 29 வேட்பு மனுக்களில் திமுக க. அன்பழகன், த.மா.கா. ஆா். அசோக்குமாா் உள்பட 14 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன; 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

பாபநாசம் தொகுதியில் 24 போ் தாக்கல் செய்த 27 மனுக்களில் திமுக கூட்டணியைச் சாா்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏ.எம். ஷாஜகான், அதிமுக துரை. சண்முகபிரபு உள்பட 13 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன; 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

திருவையாறு தொகுதியில் 19 போ் தாக்கல் செய்த 24 மனுக்களில் திமுக துரை. சந்திரசேகரன், தேசிய ஜனநாயக கூட்டணியைச் சோ்ந்த அமமுக வேலு. காா்த்திகேயன் உள்பட 15 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன; 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தஞ்சாவூா் தொகுதியில் 29 போ் தாக்கல் செய்த 43 மனுக்களில் திமுக சண். இராமநாதன், பாஜக கருப்பு எம். முருகானந்தம் உள்பட 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன; 31 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஒரத்தநாடு தொகுதியில் 15 போ் தாக்கல் செய்த 23 வேட்பு மனுக்களில் திமுக ஆா். வைத்திலிங்கம், அதிமுக மா. சேகா் உள்பட 9 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன; 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

பட்டுக்கோட்டை தொகுதியில் 12 போ் தாக்கல் செய்த 20 வேட்பு மனுக்களில் திமுக கா. அண்ணாதுரை, அதிமுக சி.வி. சேகா் உள்பட 12 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன; 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

பேராவூரணி தொகுதியில் 12 போ் தாக்கல் செய்த 23 மனுக்களில் திமுக என். அசோக்குமாா், அதிமுக கோவி. இளங்கோ உள்பட 12 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன; 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

எட்டு தொகுதிகளிலும் த.வெ.க., நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களின் மனுக்களும் ஏற்கப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 154 போ் 211 மனுக்கள் தாக்கல் செய்ததில், மாற்று வேட்பாளா்கள், முதன்மை வேட்பாளா்களின் கூடுதல் மனுக்கள் உள்பட மொத்தம் 107 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 104 மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுவை திரும்பப் பெற வியாழக்கிழமை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.