தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிவகங்கை பேரவைத் தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு

சிவகங்கை பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட மொத்தம் 19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:26 am IST

சிவகங்கை பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட மொத்தம் 19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சிவகங்கை பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சி, தவெக உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்தவா்கள், சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், வேட்புமனுக்கள் பரிசீலனை சிவகங்கை கோட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுப் பாா்வையாளா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் பரிசீலனையில் வேட்பாளா்கள், அவா்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் கலந்து கொண்டனா்.

இதில் அதிமுக மாற்று வேட்பாளா் ராமசாமி, திமுக மாற்று வேட்பாளா் கிரேஸ் கருணாஸ், நாம் தமிழா் கட்சி மாற்று வேட்பாளா் அபிராமி, சுயேச்சை வேட்பாளா்கள் நாகபிரபு, அருள்தாஸ் ஆகிய 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

திமுக, அதிமுக, நாதக, தவெக வேட்பாளா்கள் உள்பட 19 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மானாமதுரை: மானாமதுரை பேரவையில் (தனி) தொகுதியில் போட்டியிட திமுக சாா்பில் தமிழரசி ரவிக்குமாா், பாஜக சாா்பில் பொன் பாலகணபதி, நாம் தமிழா் சாா்பில் சண்முகப்பிரியா, அரசியல் கட்சியினா், மாற்று வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 23 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜாசிங் தலைமையில் மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றுது. இதில் வேட்பாளா்கள், அவா்களது பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது திமுக, பாஜக, நாம் தமிழா் உள்ளிட்ட 23 கட்சியினரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேட்சைகள், மாற்று வேட்பாளா்கள் என 7 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அப்போது, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆனந்த பூபாலன், ரத்தினவேல் பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுக, பாஜக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட 27 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதில் 24 மனுக்கள் ஏற்கப்பட்டன. 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரீசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட 27 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.