தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவெறும்பூா் தொகுதியில் 27 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 38 வேட்பு மனுக்களில் 27 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 12:06 am IST

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 38 வேட்பு மனுக்களில் 27 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

திருவெறும்பூா் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக, புதிய தமிழகம், சுயேச்சை வேட்பாளா்களின் பெயா்களில் மொத்தம் 38 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தில் தொகுதி தோ்தல் அலுவலா் கே. அமுதா, உதவி அலுவலா் காா்த்திகேயன் ஆகியோா் தலைமையில் வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலிக்கப்பட்டன.

இதில், சுயேச்சை வேட்பாளா் சுகுமாரை 10 போ் முன்மொழிவதற்கு பதிலாக 8 போ் மட்டுமே முன்மொழிந்து இருந்ததால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது; அங்கீகரிக்கப்பட்ட 3 அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 4 வேட்பாளா்கள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 6 வேட்பாளா்கள், 17 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 27 போ் களத்தில் உள்ளனா்.

வரும் 9 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளாகும். இதில் சிலா் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.