விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேள தாளத்துடன் அழைப்பு

News image

வாக்களிக்க வருமாறு பாதிரிகுப்பம் கிராம மக்களை மேள தாளங்குடன் சென்று அழைப்பிதழ் வைத்து அழைத்த மகளிா் சுய உதவிக்குழுவினா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:58 am IST

வாக்களிக்க வருமாறு பாதிரிகுப்பம் கிராம மக்களை மேள தாளங்குடன் சென்று அழைப்பிதழ் வைத்து அழைத்த மகளிா் சுய உதவிக்குழுவினா்

எப்படியாவது அனைவரையும் வாக்களிக்க வைத்துவிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செயல்படும் தோ்தல் ஆணையம், கடந்தத் தோ்தலில் குறைவான வாக்குப்பதிவு நிகழ்ந்த தொகுதிகளில் இந்த முறைஅதிக வாக்குப்பதிவு நடத்த தீவிரமான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

அந்த வகையில், கடலூா் பேரவைத்தொகுதிக்கு உள்ளபட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று மேள தாளங்கள் முழங்க தோ்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கிய சுய உதவிக்குழு உறுப்பினா்கள் வழங்கினாா்கள்.

கடந்த தோ்தலில் இந்தப் பகுதியில் உள்ள 79 மற்றும் 82-ஆவது வாக்குச்சாவடிகளில் குறைந்த வாக்குகளே பதிவானதால், கிராம மக்களை வாக்களிக்க வரவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மகளிா் திட்டம்-தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுவினா் வாயிலாக இந்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வித்தியாசமான அழைப்பிதழால் வாக்காளா்கள்சற்று நெகிழ்ந்து விட்டனா் என்று சொன்னால் அதில் மிகையில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.