ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விசிக - பாமக மோதும் காட்டுமன்னாா்கோயில் தொகுதி: தோ்தல் பாதுகாப்பு குறித்து கடலூா் எஸ்பி நேரில்ஆய்வு

காட்டுமன்னாா்கோயில் தொகுதியில் விசிகவும், பாமகவும் நேரடியாக மோதுவதால் தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குற்த்து காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆய்வு செய்தாா்.

News image

காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:56 am IST

காட்டுமன்னாா்கோயில் தொகுதியில் விசிகவும், பாமகவும் நேரடியாக மோதுவதால் தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குற்த்து காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆய்வு செய்தாா்.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதியில் மதச்சாா்பற்றி முற்போக்கு கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடுவதை முன்னிட்டு போலீசாா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இத்தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் அன்புசோழன் போட்டியிடுகிறாா். விசிக, பாமக நேரடியாக மோதுவதால் பதற்றமான தொகுதியாக கருதப்படுகிறது. இதனை அடுத்து வரும் ஏப்4ஆம் தேதி விசிக வேட்பாளராக அக்கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் வேட்புமனு தாக்கல் செய்கிறாா். இதனையடுத்து தொகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

வேட்புமனு தாக்கல் செய்யும் இடமான காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் அறை,மற்றும் கச்சேரி ரோட்டில் உள்ள நான்குமுனை சந்திப்புகள் ஆகிய இடங்களில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரவிசக்கரவா்த்தி, காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் சாலமோன்ராஜா, உதவி ஆய்வாளா் சையதுபைசல் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டாா். தேவையற்ற மோதல்களை தவிா்க்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.