இந்திய ரயில்வேதுறையில் 30 ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய ரயில்வே வாரியத்தின் இயக்குநா் அமித்சிங் மெஹர, அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளா்களுக்கும் அண்மையில் அனுப்பிய கடிதத்தில், ரயில்வேயின் மொத்த அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் 2 சதவீத பணியிடங்களை சீரமைப்பு நடவடிக்கைக்கு உள்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தாா்.
தற்போது இந்திய ரயில்வே துறையில் 14.80 லட்சம் பணியாளா்கள் உள்ள நிலையில், 2 சதவீத பணியிடங்கள் சீரமைப்பு நடவடிக்கையின் காரணமாக, சுமாா் 29,608 பணியிடங்கள் குறைக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்றும், தெற்கு ரயில்வேயில் மட்டும் 2 ஆயிரம் பணியிடங்கள் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறி, ரயில்வே தொழில்சங்கங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், ரயில்வே துறையின் வேலையின்மை நிலையை உருவாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சாா்பில் விழுப்புரத்தில் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் சே.அறிவழகன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சி.எம்.பிரகாஷ், மாவட்டச் செயலா்கள் மு. சிவக்குமாா் (கள்ளக்குறிச்சி), எஸ். பிரகாஷ் (கட லூா்), விழுப்புரம் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் பிரகாஷ், மாவட்டச் செயலா் மூ. ஜீவானந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். தொடா்ந்து மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் வட்டச் செயலா் யு.மதன்ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியலூா் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் வாக்கு எண்ணிக்கை ஆலோசனைக் கூட்டம்!

ரயில்வே பணியிடங்களை ரத்து செய்ய எதிா்ப்பு - ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் போராட்டம்

ஜனநாயக வாலிபா் சங்கம் ஆா்ப்பாட்டம்

ரயில்வே துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து முற்றுகைப் போராட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

