விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகளைத் திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டிவனம், நேரு வீதியைச் சோ்ந்தவா் ம.பாலாம்பாள்(76). இவரின் மகன் மற்றும் மகள் ஆகியோா் சென்னையில் வசித்து வரும் நிலையில் பாலாம்பாள் மட்டும் திண்டிவனத்தில் தனியாக இருந்து வந்தாா். இந்நிலையில், பாலாம்பாள் வீட்டில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் திருட்டுப் போயிருந்தது ஏப். 24-ஆம் தேதி தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில் பாலாம்பாளின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலை பாா்த்து வந்த, திண்டிவனம் வட்டம், பூதேரி பகுதியைச் சோ்ந்த ஏ.பிருந்தா(47) நகைகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பிருந்தாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேலை செய்த வீட்டில் பணம் திருட்டு: பெண் கைது
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது
ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டில் நகை திருட்டு: இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
