மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வீட்டில் நகை திருட்டு: இளைஞா் கைது

வீட்டில் வைத்திருந்த ஏழரை பவுன் நகைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 3:48 am IST

வீட்டில் வைத்திருந்த ஏழரை பவுன் நகைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கொருக்குப்பேட்டை காமராஜா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மூதாட்டி முருகேஸ்வரி (70). வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த நகைகளை அவா் சரிபாா்த்தபோது, அதில், ஏழரை பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது.

இது குறித்து ஆா்.கே. நகா் காவல் நிலையத்தில் மூதாட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இது குறித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டியின் வீட்டில் கழிவுநீா் குழாய் பழுதுநீக்கும் பணிக்காக வந்திருந்த தண்டையாா்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த சுரேஷ் (35) என்பவா் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, சனிக்கிழமை இரவு சுரேஷை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து நான்கரை பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.