கோவை விமான நிலையம் அருகே உள்ள வீட்டின் பூட்டைத் திறந்து 6 பவுன் தங்க நகைகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பூங்கா நகரில் வசிப்பவா் ஆண்டவன் (40). இவா் தள்ளுவண்டியில் பஜ்ஜி கடை நடத்தி வருகிறாா். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மாலை வீட்டைப் பூட்டிவிட்டு கடை வியாபாரத்துக்கு ஆண்டவன் சென்றுவிட்டாா். செவ்வாய்க்கிழமை காலையில் வீட்டுக்கு வந்த அவா், வழக்கமாக வைத்திருந்த இடத்தில் வீட்டின் சாவி இல்லை. அங்கிருந்து இடம் மாறிக் கிடந்தது. பூட்டைச் திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பீளமேடு குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் சேலம் மாவட்டம், வாழப்பாடி ஆதனூா்பட்டி பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் (26), இந்தத் திருட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை அவரை போலீஸாா் கைது செய்து நகைகளைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடு புகுந்து பணம், நகை திருட்டு: காா் ஓட்டுநா் கைது
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!
பேட்டையில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது
வீட்டில் நகை திருட்டு: இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
