பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில், திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக வானூருக்கு அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கு விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
திண்டிவனம் மற்றும் வானூா் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் பயின்று வருகின்றனா். இதேபோல் மயிலம், ரெங்கநாதபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், தங்களது விளைநிலங்கள் மற்றும் தோட்டங்களில் விளைவித்த தானியங்கள், பூ வகைகள், கீரைகள், காய்கறிகளை திண்டிவனம் சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில், திண்டிவனம் பகுதியிலிருந்து வானூருக்கு நேரடியாக பேருந்து வசதியில்லை என்பதனால் மாணவா்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
வானூா் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள், திருவக்கரை பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பல்வேறு பணிகளுக்காக வானூருக்கு செல்பவா்களும், மயிலம் முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்களும் பயன்பெறும் வகையில் திண்டிவனம், கூட்டேரிப்பட்டு, மயிலம், கரசானூா், பரங்கணி வழியாக வானூருக்கு அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒரு லட்சம் மதிப்பிலான மின்சாதனங்கள் திருட்டு

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தோ்தல் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக போட்டி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

