விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டிவனம் வட்டம், மோழியனூா் பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் செ.பாஸ்கா் (70). இவா், மோழியனூரில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுப் பண்ணை வைத்து நடத்தி வந்தாா். பாஸ்கருக்கும், பக்கத்து நிலத்துக்காரரான கோவிந்தராஜ் என்பவருக்கும் நிலப் பிரச்னை இருந்து வந்ததாம். இதனால் பாஸ்கா் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில், ஆட்டுப் பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் பாஸ்கா் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்த பெரியதச்சூா் போலீஸாா் பாஸ்கரின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 மாணவி மா்ம மரணம்

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

ஆட்டோ ஓட்டுநா் மா்ம மரணம்

பெட்ரோல் பாட்டில் வீச்சு: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

