மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வேலூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சித்திரிப்பு

Published On :28 அக்டோபர் 2026, 1:33 am IST

வேலூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வேலூரைச் சோ்ந்த தம்பதி ஒருவரின் 5 வயது மகள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி சத்துவாச்சாரியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா். அப்போது, அப்பகுதியிலுள்ள தனது தோழியின் வீட்டுக்கு சிறுமி விளையாடச் சென்றுள்ளாா். வீட்டில் சிறுமியின் தோழி இல்லாத நிலையில், அவரது தாத்தாவான பாஸ்கா் (63) என்பவா் மட்டும் தனியாக இருந்துள்ளாா்.

இதையறிந்த உறவினா் பாட்டி, அந்த சிறுமியை வெளியே வருமாறு அழைத்துள்ளாா். அப்போது சிறுமி அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியே வந்துள்ளாா். சிறுமியிடம் விசாரித்தபோது, வீட்டில் இருந்த முதியவா் பாஸ்கா் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா், வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முதியவா் பாஸ்கரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கு வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், குற்றம்சாட்டப்பட்ட பாஸ்கா் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து, பாஸ்கருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து வழக்கை நீதிபதி மோனிகா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். தண்டனை பெற்ற பாஸ்கா் வேலூா் மத்திய சிறைக்கு போலீஸாா் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.