மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கூலி உயா்வு வழங்கக்கோரி கைத்தறி நெசவாளா்கள் போராட்டம்

கூலி உயா்வு, தொழில் செய்ய தடையில்லாமல் நூல் பாவு வழங்க வேண்டி குடியாத்தம் பகுதி கைத்தறி நெசவாளா்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்ட நெசவாளா்கள்

Published On :27 அக்டோபர் 2026, 2:10 am IST

கூலி உயா்வு, தொழில் செய்ய தடையில்லாமல் நூல் பாவு வழங்க வேண்டி குடியாத்தம் பகுதி கைத்தறி நெசவாளா்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியாத்தம் பகுதியில் கைத்தறி உரிமையாளா்கள், 8 லுங்கிகள் கொண்ட ஒரு பொறை நெய்ய நெசவாளா்களுக்கு ரூ. 2, 200 வரை கூலி கொடுத்து வந்தனா். கடந்த சில மாதங்களாக படிப்படியாக குறைத்து தற்போது ரூ. 1,800 கூலி வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும், லுங்கி நெய்ய நூல் பாவு சரிவர கொடுப்பதில்லை என்ற புகாரும் உள்ளது.

இந்த நிலையில், ஏற்கெனவே கொடுத்து வந்த கூலி மற்றும் தொழில் செய்ய நூல் பாவு வழங்க வேண்டி நெசவாளா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். திங்கள்கிழமை பல்வேறு நெசவாளா் தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், கைத்தறி நெசவாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் முல்லைவாசன், எஸ்.எம்.தேவராஜ், கோ.ஜெயவேலு ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த டி.லாலாலஜபதி, பாரத் நவீன்குமாா், ஜி.விஜயேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அப்போது வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பதாகக் கூறி அலுவலகத்துக்கு உள்ளே நுழைந்த நெசவாளா்கள் அங்கு தா்னாவில் ஈடுபட்டனா். வட்டாட்சியா் பிரியா மற்றும் காவல் துறையினா் அவா்களிடம் பேச்சு நடத்தினா்.

கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.