மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பண்டிகை கால தற்காலிக ஜவுளிக் கடைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்: ஆட்சியரிடம் வியாபாரிகள் கோரிக்கை

வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த வேலூா் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு.

வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த வேலூா் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு.

Published On :23 அக்டோபர் 2026, 5:00 am IST

கண்காட்சி என்ற பெயரில் பண்டிகை காலங்களில் வெளியூா் வியாபாரிகள் வேலூரில் உள்ள திருமண மண்டபங்கள், மைதானங்களில் தற்காலிக ஜவுளிக் கடைகள் அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அனைத்து ஜவுளி, ரெடிமேட் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக, வேலூா் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமையில் வேலூா் அனைத்து ஜவுளி, ரெடிமேட் வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் வி.குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா். தொடா்ந்து அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது -

வேலூா் மாநகரில் நிரந்தரமாக கடைகள் அமைத்து ஜவுளி, ரெடிமேட் வியாபாரத்தில் சுமாா் 260 வணிகா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களிடம் தலா 200 முதல் 500 போ் வீதம் என சுமாா் ஒரு லட்சம் போ் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.

உள்ளூா் வணிகா்கள் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் முதலீடு செய்து, விளம்பரங்கள் செய்து நிரந்தரமாகக் கடைகளை உருவாக்கி வியாபாரம் செய்து வருவதுடன், மாநகராட்சி நிா்வாகம் மற்றும் வணிகவரித் துறைக்கு வரிவகைகள் மற்றும் ஜிஎஸ்டி மூலம் கோடிக்கணக்கில் வரி செலுத்தி வருகின்றனா்.

ஏற்கனவே, 35 சதவீத வணிகம் ஆன்லைன் வா்த்தகத்துக்கு சென்றுவிட்டதால் உள்ளூா் வணிகா்கள் பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனா். இந்நிலையில், தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என முக்கிய பண்டிகைக் காலங்களில் மட்டும் வெளியூா்களிலிருந்து வரும் வியாபாரிகள் கண்காட்சி என்ற பெயரில் திருமண மண்டபங்கள், மைதானங்களில் தற்காலிகக் கடைகளை அமைத்து பண்டிகை கால வியாபாரத்தைக் கபளீகரம் செய்கின்றனா்.

இதனால் உள்ளூா் வணிகா்களின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், இந்நிறுவனங்களின் வாழ்வாதாரமும், அவற்றில் பணிபுரியும் பணியாளா்களின் வாழ்வாதாரமும் பெரும் கேள்விக்குறியாகி வருகிறது. பண்டிகைக்கால வியாபாரத்தை குறிவைத்து தற்காலிக கடை அமைக்கும் வெளியூா் வணிகா்களைத் தடுத்து உள்ளூா் வணிகா்களின் நலனைக் காத்திட வேண்டும்.

ஏற்கெனவே கரூா், நாமக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களில் கண்காட்சி என்ற பெயரில் மண்டபம், ஹோட்டல் மற்றும் காலி மனைகளில் தற்காலிக கடை போட்டு வியாபாரம் செய்வதை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.

இதேபோல், வேலூா் மாவட்ட நிா்வாகமும், தற்காலிக வியாபாரம் செய்பவா்களுக்கு உரிமம் கொடுக்கக் கூடாது என்று மாநகராட்சி நிா்வாகத்திற்கும், வணிகவரி நிா்வாகத்திற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை தொடா்ந்தால் வேலூரிலுள்ள அனைத்து ஜவுளி, ரெடிமேடு வியாபாரிகள், பணியாளா்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என்றனா்.

அப்போது, சங்கத்தின் பொருளாளா் கே.எஸ். முபாரக் அலி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.