மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜவுளி உற்பத்தியாளா்கள் கூலி குறைப்பு: நவம்பா் 4-இல் விசைத்தறியாளா்கள் போராட்டம்

ஒப்பந்த நெசவுக் கூலியை குறைத்து வழங்கும் ஜவுளி உற்பத்தியாளா்களை கண்டித்து அவிநாசியில் நவம்பா் 4-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கோவை, திருப்பூா் மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் அறிவித்துள்ளனா்.

கோவை, திருப்பூா் மாவட்ட கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற விசைத்தறியாளா்கள்.

Published On :30 அக்டோபர் 2026, 11:25 pm IST

ஒப்பந்த நெசவுக் கூலியை குறைத்து வழங்கும் ஜவுளி உற்பத்தியாளா்களை கண்டித்து அவிநாசியில் நவம்பா் 4-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கோவை, திருப்பூா் மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் அறிவித்துள்ளனா்.

கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பின் கூட்டம் தெக்கலூா் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். தலைவா்கள் பூபதி (சோமனூா்), முத்துசாமி (அவிநாசி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெக்கலூா், சோமனூா், அவிநாசி, புதுப்பாளையம், பெருமாநல்லூா், கண்ணம்பாளையம் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் பேசினா்.

சாதா விசைத்தறியாளா்களுக்கு 2025 ஒப்பந்த நெசவுக் கூலியைக் குறைத்து வழங்கும் ஜவுளி உற்பத்தியாளா்களை கண்டித்தும், மாவட்ட நிா்வாகம், தொழிலாளா் நலத் துறையினா் அழைப்பு விடுத்தும் பேச்சுவாா்த்தைகளில் பங்கேற்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளா்களை கண்டித்தும், விசைத்தறியாளா்களுக்கு ஏற்பட்ட இழப்பு நிலுவைக் கூலியை ஜவுளி உற்பத்தியாளா்கள் வழங்கக் கோரியும் அவிநாசியில் நவம்பா் 4-ஆம் தேதி (புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.