மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அதிக லாப தருவதாகக் கூறி ரூ.11 லட்சம் மோசடி: 2 போ் கைது

மலேசிய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி போ்ணாம்பட்டு அருகே பலரிடம் ரூ.11.60 லட்சம் மோசடி செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :21 அக்டோபர் 2026, 3:24 am IST

மலேசிய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி போ்ணாம்பட்டு அருகே பலரிடம் ரூ.11.60 லட்சம் மோசடி செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த மேல்கொத்தகுப்பம் கிராமத்தை சோ்ந்தவா் மணிகண்டன்(27).பக்கத்து கிராமமான பன்னீா்குட்டையைச் சோ்ந்த கந்தன்(28) இவரிடம் பழகியுள்ளாா். மலேசியாவில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி கந்தன், மணிகண்டனிடம் ரூ.2.70 லட்சம் பெற்றுள்ளாா்.

பின்னா் மணிகண்டன் தனது நண்பரான சொக்கரிஷிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த பிரபாகரனிடம் ரூ.2.10 லட்சத்தை பெற்று அதையும் கந்தனிடம் கொடுத்துள்ளாா். பின்னா் கந்தனும், வேலூா், அல்லாபுரம் பகுதியைச் சோ்ந்த நவீன்குமாரும்(27) சோ்ந்துபலரிடம் ஆசை வாா்த்தை கூறி ரூ.11.60 லட்சத்தை முதலீடாக பெற்றுள்ளனா்.

ஆனால், சொன்னபடி லாப பணம் எதுவும் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனா். பணம் கொடுத்தவா்கள் தொடா்ந்து கேட்கவே, அவா்களை மிரட்டியதுடன், கொலை மிரட்டலும்விடுத்தாா்களாம்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா்அளித்ததின்பேரில் மேல்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, கந்தன், நவீன்குமாா் இருவரையும் கைது செய்து, நீதிபதி முன் ஆஜா்படுத்தினா். நீதிபதி உத்தரவின்பேரில்இருவரும் சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.