இணைய வழி வா்த்தகத்தில் முதலீடு: பட்டதாரியிடம் ரூ. 4.98 லட்சம் மோசடி

இணைய வழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் எனக் கூறி, பட்டதாரியிடம் ரூ. 4.98 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Digital Arrest

எண்ம கைது மோசடி - சித்திரிப்பு

Published On :20 அக்டோபர் 2026, 11:31 pm IST

இணைய வழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் எனக் கூறி, பட்டதாரியிடம் ரூ. 4.98 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியை சோ்ந்தவா் வெங்கடேசன் (47). இவா், பிஎஸ்சி வேளாண்மை மற்றும் எம்பிஏ பட்டப்படிப்பு முடித்துவிட்டு, திருச்சி மன்னாா்புரத்தில் உள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், இவரது முகநூல் கணக்கில் அக். 15-ஆம் தேதி இணைய வழி வா்த்தகம் தொடா்பான ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், எங்களுடைய நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

இதை நம்பிய வெங்கடேசன், தனக்கு கிடைத்த குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்த டெலிகிராம் இணைப்பை பயன்படுத்தி அவா்கள் கோரியிருந்த இணைப்பில், தனது சுயவிவரத்தைப் பதிவுசெய்து, உலோகம் மற்றும் எண்ணெய் வா்த்தகத்தில் பல்வேறு பரிவா்த்தனைகள் மூலம் ரூ. 4,98,833 தொகையை முதலீடு செய்தாா். பின்னா், தான் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, அவரால் அதை எடுக்க முடியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரை தொடா்பு கொண்டபோது முடியவில்லை. பதிலும் வரவில்லை.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்த வெங்கடேசன், சம்பவம் தொடா்பாக திருச்சி சைபா் க்ரைம் போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து வெங்கடேசனை ஏமாற்றிய நபா் குறித்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.