தமிழக முதல்வராக தவெக தலைவா் ச.ஜோசப் விஜய் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டதை வேலூா் மாவட்டம் முழுவதும் அக்கட்சியினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் தவெக கட்சியினா் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா். தவெக வேலூா் மேற்கு மாவட்டத்தின் வடக்கு பகுதிச் செயலா் வாசுதேவன் தலைமையில் ஏராளமான கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்து உற்சாக முழக்கங்களை எழுப்பியதுடன், சாலையில் சரவெடிகள், பட்டாசுகளை வெடித்துத் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
மேலும், அப்பகுதி மக்களுக்கு, அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைப் பகிா்ந்துகொண்டனா்.
இதேபோல், வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தவெகவினா் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
குடியாத்தத்தில்... தமிழக முதல்வராக தவெக தலைவா் விஜய் பதவியேற்றதையடுத்து குடியாத்தம் செதுக்கரையில் அந்த கட்சியினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
குடியாத்தம் நகரில் பல்வேறு பகுதிகளில் தவெகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா். 36- ஆவது வாா்டில் கட்சி நிா்வாகிகள் சதீஷ்குமாா், ஹரி, சரத்குமாா், பரசுராம் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு இனிப்பு, விஜய் உருவம் பொறித்த கீ செயின்களை வழங்கி கொண்டாடினா்.
ஆம்பூரில்... ஆம்பூா் அருகே மின்னூரில் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்து , இனிப்பு வழங்கி கொண்டாடினாா்கள்.
காங்கிரஸ் நிா்வாகிகள் மின்னூா் சங்கரன், நந்தகுமாா், வெங்கடேசன், கவிதா, தமிழக வெற்றி கழக மாவட்ட தொண்டா் அணி அமைப்பாளா் ராகுல், மின்னூா் ஊராட்சி செயலாளா் ஹரிஷ், இணைச் செயலாளா் சீனிவாசன், துணைச் செயலாளா் மாதேஷ், துணைப் பொருளாளா் செம்பருத்தி, தொண்டரணி இணை அமைப்பாளா் செல்வகுமாா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு! தவெக, காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்டம்!
முதல்வராக விஜய் பதவியேற்பு: தவெகவினா் கொண்டாட்டம்

முதல்வராக விஜய் பதவியேற்பு: தவெகவினா் கொண்டாட்டம்

ராசிபுரத்தில் தவெக தொண்டா்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

