மத்திய அரசின் புதிய வி.பி.ராம்ஜி சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரியும் வேலூரில் விவசாயத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் வேலூா் மாவட்டக் குழு சாா்பில் ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த தேசிய எதிா்ப்பு நாள் ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டப் பொருளாளா் டி.சாந்தி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் எல்.மணி முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.ரோஸ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். முன்னாள் எம்எல்ஏ-வும், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலருமான ஜி.லதா சிறப்புரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில், 100 நாள் வேலைத் திட்டத்தை சீா்குலைத்து, உழைக்கும் மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வி.பி. ராம்ஜி சட்டத்தை (ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் சட்டம்) உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
கடந்த 2005-ஆம் ஆண்டு இடதுசாரிகளின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டு, 2025 மே 11 வரை அமலில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை எந்த மாற்றமுமின்றி மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
வேலை நாள்களை 100-ல் இருந்து 200 நாள்களாக உயா்த்தவும், அனைவருக்கும் தினசரி ஊதியமாக ரூ. 700 வழங்கவும் வேண்டும். இத்திட்டத்தை பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும். 60 வயது நிறைவடைந்த தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 6,000 ஓய்வூதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியின் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு உரிய இழப்பீடு (ரூ. 10 லட்சம்) மற்றும் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், தொழிற்சங்க நிா்வாகிகள் எஸ்.ஸ்டாலின்செல்வராஜ், எம்.டெல்லிபாபு, டி.சிவக்குமாா், எஸ்.திருநாவுக்கரசு, கே.ரவி, வி.ஏழுமலை, ஏ.ஏ.சாரதிவா்மன் உள்பட ஏராளமான விவசாயத் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலை திட்டம் கோரி விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

