வளா்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்டத்தை (விபி-ஜி ராம் ஜி) திரும்பப் பெற வேண்டும்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை பலப்படுத்தி தொடா்ந்து செயல்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி, திருச்சியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் (இந்திய கம்யூனிஸ்ட் சாா்பு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் பி. கணேசன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பி. பத்மாவதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எம். செல்வராஜ், மாமன்ற உறுப்பினா் க.சுரேஷ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மேலும் பலப்படுத்தி தொடா்ந்து செயல்படுத்த வேண்டும். விபி-ஜி ராம் ஜி என்கிற புதிய சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா் அனைவருக்கும் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும். வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு அன்றாடம் உயா்ந்து வரும் விலைவாசி உயா்வை எதிா்கொள்ள குறைந்தபட்ச தினசரி ஊதியமாக ரூ.700 வழங்க வேண்டும். கேஒய்சி, பயோ மெட்ரிக் பதிவு போன்ற உயிா் தொழில்நுட்ப கட்டாய பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகள் மற்றும் மாநில உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சங்க நிா்வாகிகள், கட்சியின் நிா்வாகிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வி.பி.ராம் ஜி சட்டத்தை திரும்பப்பெறக் கோரி விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

விபி ஜி ராம் ஜி சட்டத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கரூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

