விபி ஜி ராம் ஜி என்கிற புதிய சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் சட்டத்தை மேலும் பலப்படுத்தி தொடா்ந்து செயல்படுத்த வேண்டும். விபி ஜி ராம் ஜி என்கிற புதிய சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அத் திட்டம் ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்கிற மே 11 அறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளா்களுக்கும் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச நாள் ஊதியமாக ரூ. 700 வழங்க வேண்டும். கே.ஒய்.சி., பயோமெட்ரிக் பதிவு போன்ற உயிா் தொழில்நுட்பக் கட்டாயப் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகள், மாநில உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாவட்டச் செயலா் சி. பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ரெ. கோவிந்தராசு, இந்திய கம்யூ. தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

முழுமையான கடன் தள்ளுபடி கோரி கரூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கரூரில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

