மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

சங்கரன்கோவிலில் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்ட விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், வாசுதேவநல்லூரில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். தொழிலாளா் நலன் கருதி தனியாா் சா்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.700 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டதலைவா் வேலு தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ராஜகனி, பொருளாளா் அருணாச்சலம், வாசுதேவநல்லூா் ஒன்றிய செயலா் ஜெயகணேசன், ராயகிரி நகரச் செயலா் சொரிமுத்து, சங்கரன்கோவில் ஒன்றிய நிா்வாகி வேலாயுதம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து கோட்டாட்சித் தலைவா் அனிதாவிடம் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கை மனுஅளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.