தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

100 நாள் வேலை வழங்கக் கோரி மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம்

கடந்த 6 மாதமாக 100 நாள் வேலையை முறையாக வழங்கவில்லை எனவும், அதைக் கண்டித்தும் பல்வேறு கிராம மக்கள் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் நடத்தினாா்.

News image

 கும்மிடிப்பூண்டி  வட்டார  வளா்ச்சி  அலுவலகத்தில்  ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :16 ஜூன் 2026, 1:14 am IST

கடந்த 6 மாதமாக 100 நாள் வேலையை முறையாக வழங்கவில்லை எனவும், அதைக் கண்டித்தும் பல்வேறு கிராம மக்கள் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் நடத்தினாா்.

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் கும்மிடிப்பூண்டி வட்டக்குழு சாா்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை விபி-ஜி ராம்-ஜி என்று மாற்றுவதை ரத்து செய்ய வலியுறுத்தியும், கடந்த 6 மாத காலமாக 100 நாள் வேலையை முறையாக வழங்கவில்லை எனவும், அதைக் கண்டித்தும், கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் வட்ட தொழிலாளா் ப.லோகநாதன் தலைமை தாங்கினாா்.

நிகழ்வில் வட்ட தலைவா் இ.ராஜேந்திரன், சிஐடியூ ஒருங்கிணைப்பாளா் ஜி.சூா்யபிரகாஷ், சிபிஎம் வட்டசெயலாளா் டி.கோபாலகிருஷ்ணன், விவசாய தொழிலாளா் சங்கத்தின் வட்ட

பொருளாளா் என்.நாகராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் 2026-2027 ஆண்டுக்கான 100 நாள் வேலை ஜனவரி மாதம் முதல் முறையாக வழங்காததால், வேலையை உடனடியாக வழங்க கோரியும், இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு குறைக்கக் கூடாது என்றும், 100 நாள் வேலையை 200 நாளாக மாற்றவும், கூலியை நாள் ஒன்றுக்கு 600 ரூபாயாக உயா்த்தவும், பேரூராட்சிக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தவும், கைரேகை கருவிழி வருகை பதிவேட்டு முறையை ரத்து செய்யக் கோரியும், 100 நாள் வேலைக்கான அதிகாரத்தை ஊராட்சி கிராம சபைக்கு வழங்கவும் கோரி அனைவரும் முழக்கமிட்டனா்.

தொடா்ந்து மேற்கூறிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகா் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினரிடம் இருந்து பெற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், விபி-ஜி ராம்-ஜி திட்டமாக மாற்றம் பெற்றது. இந்த நிலையில்,

திட்டத்தின் விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அரசு ஆணை இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில் திட்டம் குறித்து அரசாணையை பெற்றதும், பொதுமக்களுக்கு பணிகள் வழக்கம் போல வழங்கப்படும் என்று உறுதி கூறியதை தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.